job news
சட்டபடிப்பு படித்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சியில் வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்க..
சட்டபடிப்பு படித்தவர்களுக்கென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது சிவில் நீதிபதிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இத்தேர்விற்கான விண்ணப்பங்களை http://www.tnpsc.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை பற்றிய தகவல்களை காணலாம்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க தொடங்கும் தேதி: 01.06.2023
விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
விண்ணப்பங்களை திருத்தம் செய்யும் நாள்: 05.07.2023 முதல் 07.07.2023 வரை
முதல் நிலை தேர்வு: 19.08.2023
மெயின் தேர்வு : 28.10.2023, 29.10.2023.
காலியிடங்கள்:
இப்பணிக்கான காலியிடங்கள் 245 என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:
வழக்கறிஞர் பயிற்சி மேற்கொள்பவர்கள்/ அரசு வழக்கறிஞர்களின் உதவியாளர்கள்:
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், விதவைகள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதை தவிர மற்றோர் குறைந்தபட்சம் 25 வயது முதை அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தற்போது சட்டபடிப்பை முடித்தவர்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 22 வயதினையும் அதிகபட்சமாக 29 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். அவரவர் சமூகத்திற்கு ஏற்ப வயது தளர்வானது அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை காணலாம்.
தேர்வு கட்டணம்:
பதிவு கட்டணம்: ரூ.150
முதல் நிலை தேர்வு கட்டணம்: ரூ. 100
மெயின் தேர்வு கட்டணம் : ரூ.200
தேர்வு நிலை:
- முதல் நிலை தேர்வு
- மெயின் தேர்வு
- வாய்மொழி தேர்வு
வருமானம்:
இப்பணியில் ரூ. 27,700 முதல் 33,090 வரையிலும் வருமானமாக பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://www.tnpsc.gov.in/Document/english/12_2023_CJ_ENG.pdf