இந்திய வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 15 முக்கியத் தொழிலதிபர்களால் நாட்டுக்கு சுமார் ₹58,000 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள இவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இவர்களை நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான சட்ட மற்றும் ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய முக்கியப் புள்ளிகள் :
விஜய் மல்லையா: (கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர்)
நிரவ் மோடி: (வைர வியாபாரி)
நித்தின் ஜே. சந்தேசரா
சேத்தன் ஜெ. சந்தேசரா
தீப்தி சி. சந்தேசரா
சுதர்சன் வெங்கட்ராமன்
ராமானுஜம் சேஷாத்திரினம்
இவர்கள் உட்பட மொத்தம் 15 பேர் “தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள்
தப்பியோடிய தொழிலதிபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவது மற்றும் பணத்தை மீட்டெடுப்பது தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறை (ED), சிபிஐ மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (Fugitive Economic Offenders Act – FEOA) 2018-ன் கீழ், வெளிநாடுகளில் உள்ள இவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.