Sanchar Saathi செயலி கட்டாயமில்லை.. விரும்பினால் Uninstall செய்யலாம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

தொலைந்து போன மொபைல் போன்களைக் கண்டுபிடிப்பது மற்றும் ஐ.எம்.இ.ஐ (IMEI) மோசடிகளைத் தடுப்பது போன்ற சைபர் பாதுகாப்பிற்கு உதவும் சன்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி இனி கட்டாயமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பயனர்களின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, தங்கள் தொலைபேசியில் இந்தச் செயலி இருந்தால், அதை நீக்க முழுச் சுதந்திரம் இருக்கும் என்று ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலியின் பயன்பாடு குறித்து பயனர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட தனியுரிமை மற்றும் கட்டாயம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து அமைச்சர் சிந்தியா கூறுகையில், “சஞ்சார் சாத்தி ஒரு சைபர் பாதுகாப்புச் செயலி ஆகும். இது மக்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால், இது கட்டாயமில்லை. பயனர்கள் விரும்பினால், தங்கள் தொலைபேசியில் இருந்து இந்தச் செயலியை ‘Uninstall’ செய்து கொள்ளலாம். இந்தப் பயன்பாடு அல்லது அது தொடர்பான தரவுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை,” என்று உறுதி அளித்தார்.

Sanchar Saathi செயலியின் முக்கியத்துவம் :
*தொலைந்த போன்களை மீட்டெடுத்தல், இழந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிந்து,   அவற்றின் சேவைகளைத் துண்டிக்க இந்தச் செயலி உதவுகிறது.

*IMEI மோசடிகளைத் தடுத்தல்: மொபைல் போன் எண்களைக்
(IMEI) குறிவைத்து நடக்கும் மோசடிகளை அடையாளம் கண்டு தடுக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

*சைபர் பாதுகாப்பு: ஒட்டுமொத்தமாக, பொதுமக்களின் மொபைல் பயன்பாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

*இந்த அறிவிப்பு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போதும், தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பயன்பாட்டில் பயனர்களின் விருப்பமே இறுதியானது என்பதை அரசு அங்கீகரித்துள்ளது போல் தோன்றுகிறது. அரசின் இந்த முடிவு, தனியுரிமை ஆர்வலர்கள் மற்றும் மொபைல் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment