பய புடிச்சிட்டான் எல்லாம் டெக்னாலஜி.. இனி குளிக்க கஷ்டப்பட வேண்டாம் வந்தாச்சு ஆட்டோமேட்டிக் குளியல் இயந்திரம்..

தொழில்நுட்பம் மனிதனின் அன்றாட சவால்களை முறியடிப்பதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. பலருக்கு காலை எழுந்த உடனே குளிப்பது என்பது அவ்வளவு சோம்பல் தனமான விஷயமாக இருக்கும். இனி குளிப்பது கூட ஒரு சுலபமான விஷயமாக மாறிவிட்டது.

ஜப்பானை தளமாகக் கொண்ட ”Science” என்ற நிறுவனம், மனிதர்களை முழுமையாகக் குளிப்பாட்டி, உடலை உலர வைக்கும் அதிநவீன தானியங்கி இயந்திரத்தை (Automatic Bathing Machine) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானிய நிறுவனங்கள் 1970கள் முதலே இது போன்ற ஒரு தானியங்கி குளியல் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய நவீன சென்சார் மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன், இந்த லட்சியம் இப்போது நிறைவேறியுள்ளது.

இந்த புதிய இயந்திரத்தின் பெயர் குறித்து வெளியாகாத நிலையில், இதன் செயல்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த இயந்திரத்திற்குள் படுத்துக் கொண்டால் போதும், அதுவே குளிப்பாட்டி, சோப்பு போட்டு, தண்ணீரில் அலசி, இறுதியாக உடலைக் காய வைக்கும் பணியையும் முடித்துவிடுகிறது.

இதில் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், பயனர் இயந்திரத்திற்குள் இருக்கும்போது மனதை லேசாக்கும் இசை மற்றும் காட்சிகள் (Music and Visuals) இயந்திரத்தின் உள்ளேயே ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் குளியல் என்பது ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் அனுபவமாக மாறுகிறது.

தொழில்நுட்பத்தின் விலை :
இந்த புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் விலை சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இல்லை. இதன் விலை 3.47 கோடி ரூபாயாக (இந்திய மதிப்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்ந்த இயந்திரம் பெரும்பாலும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையங்கள் அல்லது மிக உயர் தொழில்நுட்ப வீடுகளில் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment