அம்பானியின் ஜியோவுக்கு நேரடி சவால்.. இந்தியாவில் களமிறங்கிய எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்!.. விலை எவ்வளவு?

உலகப் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி இணைய சேவை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ (Starlink), இந்தியாவில் தனது அதிவேக செயற்கைக்கோள் இணையச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான கட்டண விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் தொலைதூரப் பகுதிகள் வரை அதிவேக இணைய இணைப்பு கிடைக்க வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண விவரங்கள் (இந்தியாவில்):
மாதாந்திரச் சந்தா₹8,600வரம்பற்ற தரவு (Unlimited Data) வசதியுடன் ஆரம்ப கட்டணமே இது. ஹார்டுவேர் (Satellite Dish Kit)₹34,000இதில் டிஷ் ஆண்டெனா, ரௌட்டர் மற்றும் ஸ்டேண்ட் ஆகியவை அடங்கும். சோதனை காலம்30 நாட்கள்சோதனை அடிப்படையில் கட்டணமின்றிச் சேவையைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் இலக்குபெரும்பாலான தரைவழி இணைய இணைப்புகளால் சென்றடைய முடியாத கிராமப்புறங்கள், மலைப் பகுதிகள், மற்றும் தொலைதூர இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்குவதே ஸ்டார்லிங்கின் முக்கிய இலக்கு ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் ஃபைபர் மற்றும் 5ஜி சேவைகளை வழங்கி வரும் நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் வருகை, நாட்டின் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புதிய போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை தொடங்குவது எப்போது?இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான உரிமத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உரிமம் கிடைத்தவுடன் இதன் வர்த்தகச் செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment