Google Photos இன்னும் ஒரு பெரிய அப்டேட் வெளியிட்டிருக்கிறது. இதுவரை photos backup பண்ணும் appஆ பார்த்திருந்தாலும், இப்போ இது முழுக்க video editing tool மாதிரி upgrade ஆகிட்டு இருக்கிறது. Android, iPhone இரண்டிலுமே இந்த புதிய editor அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
புதிய updateல் முக்கிய templatesஐ photos அல்லது videos சிலதை select பண்ணினாலே போதும். Google Photos அவற்றை auto sync செய்து music, transitions, effects சேர்த்து instantஆ ஒரு video உருவாக்கும்.
Editing idea இல்லாதவர்களுக்கும் இப்படி quick videos உருவாக்குவது super easy தானே. அதுமட்டுமல்லாமல், தேவைப்பட்ட text & music மாற்றிக்கொள்ள முடியும். Background musicயும் மாற்றலாம். இதுவரை Photosல் இவ்வளவு flexibleஆ ஒரு அம்சம் இல்லை. இப்போது பெரும்பாலான short-video apps-க்கு சொந்தமான features இப்போ கூகுள் Photosலேயே கிடைக்கிறது.
Vacation photos, birthday clips, travel momentsலாம் இனி ஒரு highlight reel மாதிரி quickஆ உருவாக்கி WhatsApp, Instagramல் share பண்ண முடியும். Google இந்த updateஐ பெரிய upgradeன்னு சொல்லி, இன்னும் பல templates மற்றும் tools விரைவில் வரும் என்று கூறியுள்ளது. Video editing கடினம் என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு சர்ப்ரைஸ் தானே!