இந்த ஆண்டு இந்தியாவில் Google searchல் மிகவும் பேசப்பட்ட விசயம் ஒரு குறிப்பிட்ட சீன phone number 5201314. சாதாரண எண்ணாக இருக்கும் இது, 2025 முழுவதும் இந்தியர்கள் அதிகமாக தேடிய எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த search trend ஏன் திடீரென உயர்ந்தது என்பது தான் இப்போது tech வட்டத்தில் பெரிய கேள்வி. பெரும்பாலான பயனர்கள் இந்த எண்ணிலிருந்து வரும் calls மற்றும் messages பற்றி சந்தேகப்பட்டு இருந்ததாக தெரிய வருகிறது.
பலர் “இந்த call நம்பலாமா?”, “scamஆ?”, “இது எந்த நிறுவனத்துக்கு?” என்று தெரிந்து கொள்ள Googleல் நேரடியாக அந்த எண்ணை தேடத் தொடங்கியுள்ளனர். சமீப காலங்களில் ஸ்பேம் மற்றும் இண்டர்நேஷனல் ஸ்கேம் கால்ஸ் அதிகரித்திருப்பதால், மக்கள் புதிய எண்களை பற்றி உடனே search செய்து verify செய்யும் பழக்கம் வளர்ந்து வருகிறது.
இந்த சீன எண்ணைப் பற்றிய searchகளில் பொதுவாகப் பார்த்தால், பலர் இதை ஸ்பேம்மாக report செய்துள்ளனர். சிலர் call attend செய்த பிறகு warning messages share செய்திருக்கிறார்கள். இதனால் எண்ணை பற்றிய curiosity மேலும் அதிகரித்து இருக்கிறது. அது முழு இந்தியாவிலும் அதிகம் தேடப்பட்ட எண்ணாக மாறியுள்ளது.
இந்த trend இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக காட்டுகிறது: இந்திய பயனர்கள் phone ஸ்கேம் குறித்து அதிக கவனத்துடன் இருக்க ஆரம்பித்துவிட்டனர். எந்த call பாதுகாப்பானது என்பதை இணையத்தில் சரிபார்த்து தான் முடிவு செய்கிறார்கள் என்பதும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.