ஆஸ்திரேலியா குழந்தைகள் social media பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த பிறகு, உலகம் முழுக்க இந்த விஷயம் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.
குறிப்பாக, சிறுவர்கள் mental ஹெல்த், online addiction, மோசமான வீடியோக்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்வதால், பல நாடுகள் புதிய விதிகளை கொண்டு வர தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் சமூக கணக்குகள் உருவாக்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Platforms சரியாக வயதை சோதிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பெரிய அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி வந்துள்ளது. இதனால் Meta, TikTok, Snapchat போன்ற பெரிய social media நிறுவனங்கள் இதை கவனமாக செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான ஆன்லைன் laws வலுவாக உள்ளன. சில நாடுகள் parentsக்கு அதிக கட்டுப்பாடு கொடுக்கும் முறையை பின்பற்றுகின்றன. அதாவது, குழந்தைகள் எந்த appஐ எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம், என்ன content பார்க்கலாம் என்பதை parents control செய்யும் வகையில் rules உள்ளது.
அமெரிக்காவில், social mediaகளுக்கு முழு ban இல்லையென்றாலும், platforms மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. சில நாடுகள் தனித்தனியாக குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளில், இதுவரை முழுமையான ban எதுவும் அறிவிக்கப்பட்டது இல்லை. ஆனால் online safety, cyber bullying, inappropriate content போன்ற விஷயங்கள் குறித்து அரசு அதிகமாக பேச ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் வயது தேர்வு, பெற்றோர் அனுமதி போன்ற rules வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.