Perplexity AI-யை Smart-ஆ பயன்படுத்துறீங்களா? இந்த Prompt Tricks தெரியுமா?

Perplexity AI இன்று பலருக்கும் Googleக்கு மாற்றாக மாறி வருது. குறிப்பாக students, content creators, மத்தியில் இந்த AI tool வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் Perplexity AIல் சரியான prompt கொடுக்கத் தெரியவில்லை என்றால், கிடைக்கும் பதில்களும் சரியாக இருக்காது என்பதே நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்.

AIயை பயன்படுத்தும்போது, “ஒரு கேள்வி கேட்டா போதும்” என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால் Perplexity AIக்கு நீங்கள் என்ன மாதிரி பதில் வேண்டும் என்பதை தெளிவாக சொன்னால் தான். அது usefulஆக சரியாகவும் பதில் தரும். 

அதனால் prompt எழுதும் விதம் ரொம்ப முக்கியமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, AI பற்றி சொல்லுன்னு கேட்டா சாதாரண பதிலே வரும். அதே சமயம், AI வேலை பாதிக்குது? 5 முக்கிய points எளிய வார்த்தைகளில் சொல்லுன்னு கேட்டால், Perplexity AI இன்னும் clearஆ பதில் தரும். அதாவது, ரொம்ப தெளிவா நார்மல் டோன்லயே இருக்கும். 

நிபுணர்கள் சொல்வது, Perplexity AIயை bestஆ பயன்படுத்த promptல context கொடுக்கணும். உங்களுடைய கல்வி தகுதியோ இல்ல வேலை செய்யும் துறையையோ சேர்த்து கொடுக்கும் நேரத்தில் இன்னும் பதில் உங்களுக்கு சரியாக அமையும். 

மேலும், தொடர் prompts ரொம்ப powerful. முதல் பதில் பிடிக்கலைன்னா, இன்னும் சிம்பிள்ளா கொடு இல்ல விவரினு சொல்லலாம். இந்த answerக்கு எடுத்துக்காட்டை கொடுக்கவும் சொல்லலாம். இப்படி செய்யும் போது ஒவ்வொரு follow-upக்கும் பதிலை சரி பண்ணும்.

AI அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த காலத்தில், Perplexity AIஐ எப்படி smartஆ use பண்ணுறோம் என்பதுதான் முக்கியம். Prompt எழுதும் முறை தெரிஞ்சு செயல்படணும்.

Leave a Comment