Google முன்னேறினா OpenAIக்கு பெரிய சிக்கல்… முன்னாள் OpenAI ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

AI உலகில் Google மற்றும் OpenAI இடையிலான போட்டி நாளுக்கு நாள் தீவிரமாகி வருது. இந்த சூழ்நிலையில், OpenAIயில் முன்பு பணியாற்றிய ஒரு ஆராய்ச்சியாளர், Google AI துறையில் OpenAIயை முந்தினால் அது நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பாக மாறும் என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து தற்போது tech உலகில் பரவலாக பேசப்படுகிறது. அவர் கூறுவது, Googleக்கு மிகப்பெரிய பலம் அதன் அளவு. பெரிய அளவிலான data, சக்திவாய்ந்த வசதிகள், பல வருடங்களாக நடந்து வரும் ஆராய்ச்சிகள் Googleக்கு AI போட்டியில் முன்னிலை கொடுக்கிறது. 

இந்த பலத்தை சரியாக பயன்படுத்தினால், Google மிக வேகமாக OpenAIயை முந்த அதிக வாய்ப்பு இருக்கக்கூடும் எனக் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

OpenAI தற்போது ChatGPT தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. ஆனால் Googleம் Gemini போன்ற AI toolsஐ தொடர்ந்து மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது. இதனால் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருவதாக AI வட்டாரங்கள் கூறுகிறது. 

இந்த போட்டி வெறும் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அல்ல. AI துறையின் எதிர்காலம் எப்படி உள்ளது, யார் முன்னணியில் இருப்பார்கள், ஒரு நிறுவனம் அதிகம் ஆதிக்கம் செலுத்துமா என்ற கேள்விகளையும் எழுப்புகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் tech experts இந்த race மிக நெருக்கமாக கவனித்து வருகிறார்கள்.

AI வளர்ச்சி வேகமாக நடந்து வரும் இந்த காலகட்டத்தில், Google மற்றும் OpenAI இடையிலான இந்த போட்டி அடுத்த சில மாதங்களில் வேறு திசையில் செல்லும் என்பதை tech உலகின் பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது. 

Leave a Comment