Otter.aiல் எழுந்த பிரச்னை Video Call உரையாடல்கள் ரகசியமாக Record ஆகுதா?

Otter.ai என்ற பிரபலமான AI transcription சேவை தற்போது ஒரு சட்ட பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. Zoom, Google Meet, Microsoft Teams போன்ற video call platformsல் நடக்கும் வீடியோகால்களை, பயனர்களின் முழு அனுமதி இல்லாமல் record செய்வதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Otter.ai பொதுவாக meetingகளை textஆ மாற்ற உதவும் toolஆக பயன்படுத்தப்படுகிறது. Office meetings, interviews, online classes போன்றவற்றில் இது அதிகமாக பயன்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் கூறப்படுவது சில நேரங்களில் users தெளிவாக ஒப்புதல் தராதபோதும், மீட்டிங் record ஆகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வழக்கு தொடர்ந்தவர்கள் கூறும்போது, Otter.ai backgroundல் audioவை capture செய்து, private உரையாடல்களை textஆ மாற்றியிருக்கலாம் என்பதாகும். இதனால் user privacy பாதிக்கப்படுவதாக, முக்கிய information பாதுகாப்பு இல்லாமல் போகும் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக Otter.ai நிறுவனம், “நாங்கள் எப்போதும் user அனுமதி இருந்தால் மட்டுமே recording செய்கிறோம். ரகசியமாக எதையும் record செய்வதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், privacy விதியை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் AI tools மற்றும் privacy குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆன்லைன் meetings அதிகரித்துள்ள இந்த காலத்தில், audio மற்றும் data பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வழக்கு நினைவூட்டுகிறது. 

Leave a Comment