அமெரிக்காவை அழிக்க வந்த மண்டகசாயம் ட்ரம்ப்!..வெனிசுலா விவகாரத்தில் கமலா ஹாரிஸ் ருத்ரதாண்டவம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா மீது மேற்கொண்டுள்ள அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ட்ரம்பை மிகக் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார்.

மண்டகசாயம் பிடித்த ட்ரம்ப்:
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ட்ரம்ப்பின் இந்தச் செயல் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், “ட்ரம்ப் ஒரு மண்டகசாயம் பிடித்தவர். அவருக்குப் பின்விளைவுகள் பற்றித் தெரியாது. அமெரிக்காவைத் தேவையற்ற போருக்குள் தள்ளி, நமது வீரர்களின் உயிரோடு விளையாடுகிறார். இது முழுக்க முழுக்க ஒரு முதிர்ச்சியற்ற, அறிவில்லாத செயல்,” என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையைப் ‘பைத்தியக்காரத்தனம்’ என்று வர்ணித்தார். “தன்னை ஒரு உலக மகா சக்தியாகக் காட்டிக்கொள்ள ட்ரம்ப் நடத்தும் இந்த நாடகம் ஒரு கிறுக்குத்தனமான செயல். சட்ட விரோதமாக ஒரு நாட்டின் அதிபரைக் (நிக்கோலஸ் மதுரோ) கைது செய்திருப்பது பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. ட்ரம்ப்பின் இந்த அதிகாரப் போதை அமெரிக்காவின் பாதுகாப்பிற்கே உலை வைத்துவிடும்,” என எச்சரித்துள்ளார்.

எண்ணெய் வளத்திற்காக நாடகம்:
“இது போதைப்பொருளுக்கு எதிரான போர் அல்ல, இது வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க ட்ரம்ப் போடும் கணக்கு. அமெரிக்க மக்களை மீண்டும் ஒரு நீண்ட காலப் போருக்குள் தள்ளி ரத்தம் பார்க்கத் துடிக்கிறார் இந்த அறிவில்லாத மனிதர்,” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் கமலா ஹாரிஸ் மிக ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார். இதனால் அமெரிக்க அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது.

Leave a Comment