2011, 2016 இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்தது திமுக. அந்த 10 வருடங்களும் அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அதே நேரம் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக மாறினார். கடந்த 5 வருடங்களாகவே தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. திமுக ஆட்சி காலம் வருகிற மே மாதத்தோடு முடிவடைகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது.
எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகமெடுக்க துவங்கியிருக்கின்றன.. குறிப்பாக கூட்டணி அமைப்பது, அந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவது, போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வளவு வாக்குகளை பெறும் என்கிற கருத்துக்கணிப்பை பலரும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது..
Voter Vibe என்கிற நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் அதிமுக 33.8 சதவீத வாக்குகளை பெறும் எனவும் திமுக அதைவிட இரண்டு சதவீதம் அதிகமாக அதாவது 35.8 சதவீத வாக்குகளை வாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..