job news
அர்ச்சகர் ஆக வேண்டுமா?..இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு..உடனே அப்ளை பண்ணுங்க..
திருச்சி மாவட்டம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சான்றிதழுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே http://www.hrce.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். இந்த விண்ணப்பங்களை வருகின்ற ஜுன் 19 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே அனுப்ப முடியும்.
பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்:
இப்பயிற்சியில் சேர விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் அவசியம்.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயதினையும் அதிகபட்சமான 24 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
பயிற்சியின் சிறப்புகள்:
- பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி படிக்கலாம்.
- உணவு, சீருடை, உறைவிடம் மற்றும் பயிற்சி காலத்தில் ஊக்க தொகையாக ரூ. 3000 வழக்கப்படும்.
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620006.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும்.
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/36/document_1.pdf