latest news
எஸ்.பி.ஐயின் அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?.. இனி ஒரு ஆண்டிற்கு கவலையே வேண்டாம்..
நமது பணத்தை ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்வது என்பது நமக்கு நன்மை தரக்கூடியதாக அமையும். அனைத்து வங்கிகளும் தங்களின் வசதிகேற்ப பல்வேறு முதலீட்டு திட்டங்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் பிரபல ஸ்டேட் பாங்க் தங்களது வங்கியில் “அம்ரிட் கலாஷ்” எனும் நிலையான வைப்புதொகைக்கான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டமானது முதன்முதலாக 2022-2023 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இத்திட்டமானது கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி திரும்பவும் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டமான ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதனை பற்றிய தகவல்களை காணலாம். இந்த நிலையான வைப்பு தொகை திட்டமானது 400 நாட்கள் கழித்து முதிர்வடையும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி நாம் முதலீடு செய்யும் தொகையானது 400 நாட்களுக்கு பின் நமக்கு வட்டியுடன் சேர்ந்து கிடைக்கும். இதன் வட்டி விகிதமானது வயதானவர்களுக்கு 7.6%மும் மற்றவர்களுக்கு 7.1%மும் உள்ளது. மேலும் இந்த தொகையினை நாம் மாதம்/காலாண்டு அல்லது அரையாண்டு எனும் வீதத்திலும் வங்கிகளில் செலுத்தலாம்.
மேலும் இந்த கணக்கிற்கு எதிராக கடன் வசதியும் நாம் வாங்கி கொள்ளலாம். இந்த சேவையை நாம் எஸ்.பி.ஐ வங்கியிலோ அல்லது YONO முறையிலோ வைப்பு தொகையாக செலுத்தலாம். இந்த திட்டத்திற்கு வருமான வரி விலக்கு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.