கவர்ன்மென்ட்ல ரெஜிஸ்டர் கூட பண்ணாம ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’-னு போலி போர்டை மாட்டிட்டு, கல்வி நிறுவனங்களையே ஏமாத்தி 100 கோடியைச் சுருட்டியிருக்கே… திமுக பவர்ல்ல இருந்தப்ப ஆட்டம் போட்ட உன்னை, இப்போ சிசிபி போலீஸ் கம்பி எண்ண வச்சிருச்சு பாத்தியா… இதுதான் ரியல் ஆக்ஷன்! விஜய் ஆட்சியில தப்பு செஞ்சவன் அரசியல்வாதி இருந்தாலும் சரி, அரசியல்வாதிக்கு நெருக்கமா இருந்தவங்களா சரி ஒருத்தரையும் விடமாட்டோம்…

பெருமதிப்பிற்குரிய கல்வி நிறுவனங்களை ஏமாற்றி, நூறு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் திமுகவை சேர்ந்த முக்கியப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான பி.டி. அரசகுமார் என்பவர்தான் இந்த இமாலய மோசடி புகாரில் சிக்கி, தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கும் நபர் ஆவார். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி இந்த இமாலய தொகையை அவர் சுருட்டியுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அரசகுமார், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாத, பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு போலி அமைப்பை நடத்தி வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்ட அவர், தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பள்ளிகளின் நிர்வாகிகளிடம் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கையும், அரசு உயர் அதிகாரிகளுடன் இருக்கும் நெருக்கத்தையும் காட்டி, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மிக எளிதாக முடித்துத் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகள் தங்களது கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கும், அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்துவதற்கும் பல்வேறு அரசுத் துறைகளின் சட்டபூர்வ அனுமதிகள் அவசியமாகின்றன. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசகுமார், பள்ளிகளுக்கான நிரந்தர அரசாங்க அங்கீகாரம், பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல், மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் முக்கியமான கட்டிட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பல கோடி ரூபாயை அள்ளியுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை வசூல் செய்துள்ளார்.

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் தனக்கு இருக்கும் அசாத்தியப் பிடிமானம் மற்றும் செல்வாக்கை நம்பியே பள்ளிகளின் நிர்வாகிகள் அவரிடம் கோடிக்கணக்கான பணத்தை நம்பி ஒப்படைத்துள்ளனர். ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அவர் கூறியபடி எந்தவொரு அரசு அனுமதியையும், சட்டபூர்வமான சான்றிதழ்களையும் பெற்றுத் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த பள்ளி நிர்வாகிகள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். பணத்தைத் தராமல் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர்.

பள்ளி நிர்வாகிகளின் புகார்களைப் பெற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், இது தொடர்பாகத் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையிலேயே அரசகுமார் நடத்திய அமைப்பு போலியானது என்பதும், அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அவர் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் உறுதியானது. இதையடுத்து, சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்பிக்காதவாறு அவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆளுங்கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாக வலம் வந்த ஒருவரே, கல்வித் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களை டார்கெட் செய்து நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த மோசடிப் பின்னணியில் வேறு ஏதேனும் அரசு உயர் அதிகாரிகளுக்கோ அல்லது அரசியல் தலைவர்களுக்கோ தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்களும், கைதுகளும் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment