Connect with us

Finance

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?..இதோ உங்களுக்கான நற்செய்தி.. இனி வாய்ஸ் கால் மூலமே பணப்பரிவர்த்தனை செய்யலாம்..

Published

on

pnb ivr based upi123pay

நாட்டில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நமது பணபரிவர்த்தனையை மிகவும் எளிதாக்கும் வழியில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது தங்களது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஐ.விஆர் அடிப்படையாக கொண்ட யூபிஐ 123பே(UPI 123PAY) என்ற வசதியை கொண்டு வந்துள்ளது. இது டிஜிட்டல் பேமெண்ட் விஷன் 2025  எனும் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

upi123 pay

upi123 pay

யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ் என்பது 24 மணி நேரமும் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாகும். இதன் மூலம் நாம் எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தினை மாற்றவோ அல்லது மற்றவரிடம் இருந்து பணத்தினை பெறவோ முடியும். நாம் நமது மொபைல் போன் மூலமாகவே பணபரிவர்த்தனையை பண்ண முடியும். ஆனால் இந்த வகை பரிவத்தனைக்கு நமக்கு மொபைல் இண்டர்நெட் தேவைப்படும்.

ஆனால் நாட்டின் பெரும்பாலான மக்கள் கிராமபுற மற்றும் புறநகர பகுதிகளில் வசிப்பவர்களாகவே உள்ளனர். அவர்கள் அனைவருமே தங்களின் தினசரி தேவைக்கு பணத்தினையே நம்பியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியானது பெரும்பாலும் கிராமபுறங்களிலையே  செயல்படுவதால் அது தங்களது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தற்போது இந்த ’யூபிஐ 123 பே’ வசதியினை கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த வசதி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் உபயோகப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை எவ்வாறு உபயோகப்படுத்துவது:

ivr based upi123 pay

ivr based upi123 pay

யூபிஐ 123பே(UPI 123PAY) உபயோகப்படுத்துவதற்கு பின்வரும் படிநிலையை பின்பற்றவும்.

  1. வங்கியின் ஐவிஆர் எண் “9188-123-123 க்கு கால் செய்யவும்.
  2. பயனாளியை தேர்வு செய்யவும்.
  3. பணபரிவர்த்தனையை உறுதி செய்யவும்.

இந்த வசதியானது நாம் விருப்பட்ட மொழிகளில் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எனவே இந்த முறை நமது பண பரிமாற்றத்தை எளிமையாக்கும் எனவும் நம்பப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *