latest news
சமையலை தவிர தேங்காய் எண்ணையை இத்தனை வழிகளில் யூஸ் பண்ணலாமா?..
தேங்காய் எண்ணெய் தென்னிந்தியாவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இதனை பலர் சமையலில் பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெயில் பல்வேறு ஊட்ட சத்துக்களும் அடக்கியுள்ளன. குறிப்பாக புரதசத்து, கார்போஹைட்ரேட், இரும்புசத்து போன்ற எண்ணற்ற சத்துகளும் அடங்கியுள்ளன. இதனை சமையலைத் தவிர பொதுவாக முடி பராமரிப்பிற்கும் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்துகின்றானர். இதையும் தாண்டி தேங்காய் எண்ணெயை பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது:
தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் டிரைகிளிசரைடு(MCT) எனப்படும் ஒருவகை கொழுப்பு உள்ளது. இதனை நமது உடம்பாடனது எளிமையாக உறிஞ்ச கூடியது. மேலும் இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதுடன் மூளை சம்பந்தபட்ட நரம்புகளையும் நன்கு வேலை செய்ய வைக்ககூடியது. எனவே தினமும் நாம் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் இது நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை சீராக வைகின்றது.
பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு:
ஆயில் புல்லிங் எனப்படும் வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது நமது பற்களுக்கும் தொண்டைக்கு சிறந்த பயன்களை விளைவிக்கிறது. சிறிதளவு தேங்காய் எண்ணெயை 10 நிமிடங்களுக்கு வாயில் வைத்து கொப்பளிப்பதால் நமது பல்லில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறி பற்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் லாரிக் ஆசிட் எனும் பாக்டீரியாவை எதிர்க்கும் பொருள் இருப்பதால் இது பற்களில் ஏற்படும் தொற்றுகளை சரிசெய்கிறது.
ஒப்பனை நீக்கியாக (Makeup remover) செயல்படுகிறது:
பெருப்பாலான மேக்கப் ரிமூவர்கள் நமது முகத்தில் எரிச்சலை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட ரிமூவர்களை நாம் உபயோகிக்காமல் அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் நமது முகத்தில் உள்ள நீர்தன்மை குறையாமல் நமது முகத்தினை பொலிவுடன் வைக்க செய்யும்.
பாக்டீரியாக்களிலிருந்து விடுபட:
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஆண்டி மைக்ரோபியல் தன்மை கொண்டது. எனவே இதனை நாம் அன்றாடம் குளிப்பதற்கு முன் நமது உடலில் 10 நிமிடங்கள் தேய்த்து ஊற வைத்தால் நமது உடம்பில் சருமம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் இருக்கும். மேலும் இதனை அடிப்பட்ட காயங்களில் அப்ளை செய்வதனால் தொற்றிலிருந்து நமது உடலை காக்கலாம்.
இவ்வாறு தேங்காய் எண்ணெயை பல வகைகளில் உபயோகப்படுத்தலாம்.