திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பிரபல துப்பாக்கி தொழிற்சாலையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
முக்கியமான நாட்கள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 21.06.2023
இப்பணிக்கான விண்ணாப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 09.07.2023
கல்வி தகுதி:
Diploma Engineering Trainee:
இதற்கு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தும் மெக்கானிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல் என எதேனும் ஒரு துறையில் டிப்ளமோ படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
Engineering Graduates Trainee:
இதற்கு மெக்கானிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல் என எதேனும் ஒரு துறையில் பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
Non-Engineering Graduate Trainee:
இதற்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் பயன்பாடுகள், ஆங்கிலம், வரலாறு, வணிகம், வணிக நிர்வாகம், புள்ளிவிவரங்கள் என எதேனும் ஒரு பிரிவில் பட்ட படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
மாத வருமானம்:
டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.8000ம் மற்றவர்களுக்கு மாதம் ரூ.9000ம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற தகுதிகள்:
இப்பணிகளுக்கு 2020ஆம் ஆண்டிற்கு பின்னர் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு நிலை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க National Apprenticeship Training Scheme-யின் அப்ரண்டீஸ் போர்டலில் நமது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தகுதி உடையவர்கள் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
https://drive.google.com/file/d/1SHG8mNYp2kDpBsREDiuAslmo0TUpRImz/view
இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action