ISROக்கு செல்லவேண்டும் என்பது பலரின் கனவாகவே இருந்து வருகிறது. அப்படியானவர்களுக்கான ஒரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான அறிவுப்பு வெளியாகியுள்ளது. அதனை பற்றிய தெளிவான விளக்கத்தை பார்ப்போம்.

கடைசி நாள்:
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்- 02.05.2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்- 16.05.2023
பணியிடங்கள்:
திருவனந்தபுரம்.
பதவியின் பெயர்:
டெக்னிகல் அஸிஸ்டெண்ட்(Technical assistant)- 60 காலியிடங்கள்
சைண்டிஃபிக் அஸிஸ்டெண்ட்(Scientific assistant)- 02 காலியிடங்கள்
லைப்ரரி அஸிஸ்டெண்ட்(Library assistant)- 1 காலியிடம்
வயது வரம்பு:
இத்தேர்விற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி:
- டெக்னிகல் அஸிஸ்டெண்ட்(Technical assistant):
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ கம்யூட்டர் சயின்ஸ்/ சிவில்/ ஆட்டோமொபைல்/ கெமிக்கல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சயிண்டிஃபிக் அஸிஸ்டெண்ட்(Scientific assistant):
இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேதியியல் துறையில் பட்டபடிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- லைப்ரரி அஸிஸ்டெண்ட்(Library assistant):
இப்பணிக்கு விண்ணப்பிக்க நூலக அறிவியலில் பட்டபடிப்பு பெற்றிருக்க வேண்டும்.
மாத வருமானம்:
இந்த பணிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ. 44,900 முதல் அதிகபட்ச வருமானமாக ரூ. 1,42,400 ஆக பெறலாம்.
தேர்வு கட்டணம்:
இத்தேர்விற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 வசூலிக்கப்படுகிறது. பெண்கள்/ தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர்/முன்னாள் வீரர்கள்/ மாற்றுதிறனாளிகள் போன்றோர் இத்தேர்வினை எழுதிய பின் அவர்கள் விண்ணப்பித்த பணம் அவர்களின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பப்படும். மற்றோருக்கு ரூ. 500 அவரிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு
- திறன் தேர்வு
இதற்கான முழு விவரங்களை கீழே உள்ள இணையவழியில் சென்று அறிந்து கொள்ளலாம்.
https://www.vssc.gov.in/assets/img/PDF/Recruitment/Advt323_EN_BILINGUAL.pdf