Connect with us

schemes

மாத வருவாய் தரும் பொன்னான திட்டத்தில் இப்பவே சேருங்க… வயதான காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பு

Published

on

இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால் பெரும்பாலானோர் இங்கு தான் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாதா மாதம் வருவாய் வரும் ஒரு உன்னத திட்டம் ஒன்றை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் என்னன்னு பார்க்கலாமா…

monthly income

ஒரே ஒரு முறை முதலீடு செய்தால் போதும். மாதா மாதம் வருமானம் தருகிறது அஞ்சல் துறை. இது முதியோர்களுக்கு ஏற்ற பொன்னான திட்டம். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சமாக ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

தனிநபர் அல்லது கூட்டு சேமிப்புத் திட்டமாகவும் தொடங்க முடியும். கூட்டு சேமிப்புத் திட்டத்தில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5ஆண்டுகள்.

முதிர்வுகாலம் முடிந்தாலும் கூட இதை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். முதியோர்கள் வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லை.

இந்தத் திட்டத்திற்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம். இந்தத் திட்டத்தைத் துவங்கிய ஒரு மாதத்தில் இருந்தே உங்களுக்கு மாத வருவாய் அதாவது நீங்கள் கட்டிய பணத்திற்கான வட்டி கிடைத்துவிடும். இதற்கு கூட்டு வட்டி கிடையாது. தனி வட்டி மட்டுமே உண்டு.

இடையிலேயே கணக்கை முடித்துக் கொள்ள நினைத்தால் முதல் 3 ஆண்டுகள் வரை 2 சதவீதம் தொகை கழிக்கப்பட்டு மீதம் தரப்படும். 3 ஆண்டுகளுக்கு மேல் என்றால் ஒரு சதவீதத் தொகை கழிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும்.

MIP

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.555 வட்டி கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1100 வட்டி கிடைக்கும். ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1650 வட்டி கிடைக்கும்.

ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.2200 வட்டி கிடைக்கும். ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.2475 வட்டி கிடைக்கும். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.4950 வட்டி கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகக் கிளையை அணுகுங்கள்.

google news