Connect with us

job news

தமிழ் எழுதப்படிக்க தெரியுமா..? அப்போ இது உங்களுக்குத்தான்..கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

Published

on

Kalaignar Centenary Hospital

தமிழக அரசால் அண்மையில் சென்னை, கிண்டியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார்பூராவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மருத்துவமனை வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், பல்வேறு பணிகளில் ம்மொத்தமாக 206 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் – 8 காலிப்பணியிடங்கள்.
  • லேப் டெக்னீஷியன் – 15 காலிப்பணியிடங்கள்.
  • மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் – 15 காலிப்பணியிடங்கள்.
  • கேத்தி லேப் டெக்னீஷியன்  -4 காலிப்பணியிடங்கள்.
  • CSSD தொழில்நுட்ப உதவியாளர் – 5 காலிப்பணியிடங்கள்.
  • ஈசிஜி தொழில்நுட்ப ஆபரேட்டர் – 6 காலிப்பணியிடங்கள்.
  • ஆய்வக டெக்னீஷியன் – 8 காலிப்பணியிடங்கள்.
  • உடற்பயிற்சி உதவியாளர் – 2 காலிப்பணியிடங்கள்.
  • ரேடியோ தெரபி டெக்னீஷியன் – 7 காலிப்பணியிடங்கள்.
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 5 காலிப்பணியிடங்கள்.
  • அலுவலக உதவியாளர் – 5 காலிப்பணியிடங்கள்.
  • மருத்துவ உதவியாளர் – 100 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரர் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணி சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் ,  மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • ரேடியோ தெரபி டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிப்பவர் ரேடியோ தெரபியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர் www.kcssh.org அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு இருக்கும் Notification அறிவிப்பில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.
  • பிறகு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் சுயவிவரப்படிவத்தைக் (Resume) கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார்.

அனுப்ப வேண்டிய முகவரி :

இயக்குனர்,
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை,
கிண்டி,
சென்னை – 600032.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.12,000 முதல் 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Kalaignar Centenary Hospital

Kalaignar Centenary Hospital

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *