job news
சென்னை கோவிலில் அட்டகாசமான வேலைவாய்ப்பு…அசத்தலான சம்பளம்…யோசிக்கமா விண்ணப்பீங்க.!!
சென்னை மாவட்டம் பூங்கா நகர், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் ஓதுவார்,பரிச்சாரகர், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என வேலைவாப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம்.
காலியிடங்கள்
இந்த ஓதுவார்,பரிச்சாரகர், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு மொத்தமாக 3 காலியிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேவையான தகுதி
ஓதுவார்
- தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
- சமய, அரசு, பிற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலை அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களின் |சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேவாரம் இசையுடன் பாடும் திறமை இருக்க வேண்டும்.
பரிச்சாரகர்
- தமிழில் எழுதப் படிக்கத் | தெரிந்திருக்க வேண்டும்
சுயம்பாகி
- திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயதைப் பூர்த்தியடைந்துள்ளவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
- ஓதுவார் – 11600
- பரிச்சாரகர்- 13200
- சுயம்பாகி- 13200
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலவலகத்தில் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம், எண்.44, இராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும். 01.08.2023 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், தேவையான விபரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும், வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.