Connect with us

Cricket

நா அடிச்சாலே வெளியே தான்! சிக்ஸரை பறக்கவிட்ட ரஸ்ஸல்..வைரலாகும் வீடியோ.!

Published

on

அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அடித்த சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. 108மீ தூரம் அடித்த அந்த சிக்ஸரை கண்டு மைதானமே அதிர்ந்தது. நேற்று  சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் போட்டியின் போது ஆண்ட்ரே ரஸ்ஸல் 108 மீட்டர் தூரத்தில் சிக்ஸர் அடித்து நொறுக்கிய சிக்ஸரை அடித்தார்.

Andre Russell 108

Andre Russell 108

இது தான் மேஜர் லீக் கிரிக்கெட் 2023 இன் மிகப்பெரிய சிக்ஸர். நேற்று நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் நைட் ரைடர்ஸ் வீரர் ரசல் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்தார். ஆனால், இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது. அணி தோல்வி அடைந்தாலும் ஆண்ட்ரே ரஸ்ஸல் அடித்த அந்த சிக்ஸர் அனைவரையும் கவர்ந்தது.

ஐபிஎல் போட்டிகளிலேயே அவர் அடிக்கும் சிக்ஸார்கள் மைதானத்திற்கு வெளியே பறந்து விடும் அதே போலவே அந்த அதிரடி ஆட்டத்தை அமெரிக்க மேஜர் லீக்ளையும் காமித்து மிரள வைத்துள்ளார.  அவர்  108 மீட்டர்  தூரத்தில் அடித்த அந்த பந்து மைதானத்தை விட்டு வெளியே பறந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த பலரும் ரஸ்ஸல்  சிக்ஸர் அடித்தாலே அந்த பந்து வெளியே தான் என கூறி வருகிறார்கள். மேலும் இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராவோ ஒரு பந்தை 103 மீட்டருக்கு சிக்சர் அடித்து பறக்க விட்டார் அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *