Connect with us

latest news

ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை: நபரிடம் ரூ. 1 கோடி சுருட்டிய மோசடி கும்பல்!

Published

on

Cybercrime

ஆன்லைனில் பகுதி நேர வேலை கொடுப்பதாக கூறி ஏராளமான மோசடி சம்பவங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாட்ஸ்அப், மெசேஞ்ச் மற்றும் அழைப்புகள் என்று ஏராள வழிகளில் மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் பகுதி நேர வேலை கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை களவாடி வருகிறது. அந்த வரிசையில் பகுதி நேர வேலை மோசடியில் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் 56 வயதான நபர் இணைந்திருக்கிறார்.

விளம்பர துறையில் பணியாற்றி வரும் பூனேவை சேர்ந்த நபர் பகுதி நேர வேலை கொடுப்பதாக தனக்கு வந்த குறுந்தகவலை நம்பி மோசடி கும்பலிடம் ரூ. 96 லட்சத்து 57 ஆயிரத்தை பறிக்கொடுத்திருக்கிறார். மொபைல் போனிலேயே பகுதி நேர வேலை கொடுப்பதாக இந்த நபருக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது. பின் இவரை மெசேஜிங் செயலியின் க்ரூப் ஒன்றில் சேர வலியுறுத்தி உள்ளனர்.

Cybercrime

Cybercrime

பகுதிநேர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த நபர் அவர்கள் கூறியதை செய்திருக்கிறார். பின் இவரை நம்ப வைக்க மோசடி கும்பல் முதற்கட்டமாக ‘வெல்கம் போனஸ்’ என்ற பெயரில் ரூ. 10 ஆயிரம் அனுப்பியிருக்கிறது. இத்துடன் கார்ப்பரேட் பயண நிர்வாக நிறுவனங்களின் கவர்ச்சிகர சலுகைகளையும் சன்மானமாக வழங்கியது. இதன்பின் அதிக தொகை சம்பாதிக்க சில பிரீபெயிட் நடவடிக்கைகளை முடிக்குமாறு மோசடி கும்பல் வலியுறுத்தி இருக்கிறது.

இதை அடுத்த இந்த நபர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டு பலருக்கு பணம் அனுப்பியிருக்கிறார். தான் ஏமாற்றப்படுவதை அறியாமல், இந்த நபர் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரையிலான தொகையை அனுப்பிவிட்டார். முதலில் இவரிடம் ரூ. 21 ஆயிரத்து 990 தொகையை மோசடி கும்பல் அனுப்ப வைத்திருக்கிறது. பிரீபெயிட் பணிக்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்று அந்த கும்பல் தெரிவித்து இருக்கிறது.

இவ்வாறு செய்த பின் நபருக்கு ரூ. 24 ஆயிரத்து 809 திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து மோசடி கும்பல் இவரிடம் ரூ. 80 ஆயிரம் தொகையை அனுப்ப கூறியது. இதற்கான கட்டணங்கள் சேர்த்து ரூ. 94 ஆயிரத்து 840 தொகையை அனுப்ப வைத்தனர்.
இதோடு அந்த நபரிடம் ரூ. 1 லட்சம் அனுப்ப மோசடி கும்பல் வலியுறுத்தியுள்ளது. இதை அனுப்பிய நபர், தனது தொகைக்கான கமிஷனுடன் திருப்பித் தருமாறு கேட்டார்.

Cybercrime

Cybercrime

கமிஷன் தொகையை கேட்டதும், மோசடி கும்பல் இவரிடம் மீண்டும் பேசி ரூ. 35 லட்சத்து 25 ஆயிரம் தொகையை செலுத்த வலியுறுத்தியது. இவ்வாறு செய்தால், நபர் கொடுத்த தொகை முழுமையாகவும், கூடுதலாக அதிக கமிஷனை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இந்த நபருக்கு பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மோசடி கும்பல் இவரிடம் இருந்து நூதன முறையில் பணத்தை அபகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சைபர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதோடு ஏமாற்றப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு சமயங்களில் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தையும் முடக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!

Published

on

டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.  சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.

கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

Published

on

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.

அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்

google news
Continue Reading

india

சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!

Published

on

அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

google news
Continue Reading

Trending