Connect with us

Cricket

ஐபிஎல்லில் அதிக பிராண்ட் வேல்யூ – முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கேவின் மதிப்பு தெரியுமா?

Published

on

ஐபிஎல் தொடரின் சந்தை வணிக மதிப்பு கடந்த ஆண்டை விட 6.5% அதிகரித்து ரூ.1,35,000 கோடியாக (16.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்ந்திருப்பதாக அமெரிக்க வங்கி முதலீட்டு நிறுவனமான Houlihan Lokey, Inc வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

அதேபோல், ஐபிஎல் என்கிற தனி பிராண்டின் மதிப்பு மட்டுமே 6.3% அதிகரித்து 2024-ம் ஆண்டில் ரூ.28,000 கோடியாக (3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்ந்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிஎஸ்கே டாப்
ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட பிராண்ட் வேல்யூ 9% அதிகரித்து ரூ.1,930 கோடியுடன் (231 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சிஎஸ்கே முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ரூ.1,896 கோடியுடன் (227 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆர்சிபி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.

2024 ஐபிஎல் சாம்பியன்களான கொல்கத்தா அணி இந்த ஆண்டு அதிகபட்ச வளர்ச்சியாக 19.3% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.1,805 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் ரூ.1,704 கோடி மதிப்புடன் மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்திலும் ரூ.1,111 கோடியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்தாவது இடத்திலும் ரூ.1,103 கோடி மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆறாவது இடமும் பிடித்திருக்கின்றன.

முன்னதாக, ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2024-2028 ஆண்டுகளுக்கு டாடா குழுமம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.2,500 கோடி கொடுத்து பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news