Connect with us

india

17 வயது சிறுமி தொடர்பான போக்சோ வழக்கு!. எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்!.. நீதிமன்றம் அதிரடி..

Published

on

yediyurappa

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்ச்சோ வழக்கில் ஜாமினில் வெளிரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம் செய்தார் என கடந்த மார்ச் மாதம் பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக எடியுரப்பா தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புகார் கொடுத்த சிறுமியின் தாய் இறந்து போனார். தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஒருபக்கம், விசாரணைக்கு ஆஜராகமாறு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை. ஆனால், ஜூன் 17ம் தேதிதான் ஆஜராக முடியும் என பதில் கூறினார் எடியூரப்பா. இந்நிலையில்தான், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *