ஓட்டலிலும் வேலை பார்க்கிறார்.. சௌரப் பற்றி பேசிய சகோதரி நிதி நெட்ராவல்கர் 

அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சௌரப் நெட்ராவல்கர். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் சௌரப்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சௌரப் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசினார். அடுத்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

கிரிக்கெட் தவிர்த்து சௌரப் ஆரக்கிள் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சௌரப் நெட்ராவல்கர் பற்றி அவரது சகோதரி நிதி நெட்ராவல்கர் கூறிய கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

தற்போது புகழின் வெளிச்சத்தில் உள்ள சௌரப் நெட்ராவல்கர் பற்றி அவரது சகோதரி கூறும் போது, வாழ்க்கை பயணம் முழுக்க அவரை சுற்றிலும் அவருக்கு ஆதரவாக நிற்பவர்களை பெறும் அளவுக்கு பாக்கியசாலியாக இருந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடாத காலக்கட்டத்தில் அவர் தனது பணியை 100% சிறப்பாக செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்தவர். இதனாலேயே அவர் எங்கு சென்றாலும் கையுடன் தனது லேப்டாப்-யும் எடுத்துக் கொள்வார். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கும் வசதி அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கு வரும் போதும் அவர் வேலை பார்ப்பார். போட்டிகளின் போது ஓட்டலில் தங்கியும் வேலை பார்க்கிறார். அந்த அளவுக்கு அவர் அர்ப்பணிப்பு கொண்டவர், என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் மற்றும் அலுவலக வேலை என இரண்டையும் கவனித்து வரும் சௌரப் அதற்கும் பாராட்டப்படுகிறார். தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அவர் ஆரக்கிள் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.

Leave a Comment