health tips
வெங்காயத்தை இப்படி கூட யூஸ் பண்ணலாமா?.. அட சூப்பர்ல..
வெங்காயம் என்பது நாம் அனைவரும் சமையலுக்காக உபயோகப்படுத்தும் மிக முக்கியமான பொருளாகும். இதனை நாம் மருந்தாகவும் உபயோகப்படுத்தலாம். வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு சமையலும் இல்லை எனத்தான் கூற வேண்டும். மேலும் இந்த வெங்காயமானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பொருளாகவும் பயன்படுகிறது. இதனை சமையல தவிர பல வகைகளிலும் நாம் உபயோகப்படுத்தலாம். அது என்னென்ன என பார்ப்போம்.
துரு கறைகளை நீக்க பயன்படுகிறது:
சிரிதளவு வெங்காய சாற்றை நாம் துருபிடுத்த கத்தி, அரிவாள் போன்ற பொருட்களின் மேல் தடவுவதால் நாம் அதன் மீது உள்ள துரு கறைகளை சுலபமாக போக்கலாம்.
தேனீ கடித்த இடத்தை ஆற்ற:
தேனீ கடித்த இடத்தின் மேல் வெங்காயத்தை மெதுவாக தேய்ப்பதால் அதனால் ஏற்படும் வலியையும் பின் புண்ணையும் வர விடாமல் தடுக்கலாம்.
பெயிண்ட் வாசனையை போக்க:
விலையுயர்ந்த ரூம் ஃப்ரஷ்னர்களை வாங்கி பணத்தை வீணாக்குவதை விட சிறிதளவு வெங்காயத்தை சிறிய தட்டில் தண்ணீருடன் சேர்த்து வைத்து அதனை புதிதாக பெயிண்ட் செய்யப்பட்ட அறையில் வைத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாசனைகளிலிருந்து விடுபடலாம்.
முகப்பருக்களை நீக்க:
சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை தண்ணீருடன் சேர்த்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் முகப்பருக்களை நீக்கலாம். மேலும் இதனை புண் உள்ள இடத்தில் தேய்ப்பதால் எரிச்சலில் இருந்து விடுபடலாம்.
அடிபிடித்த வாசனையை போக்க:
சமையலறையில் அடிபிடித்த வாசனை போக சிறிதளவு வெங்காயத்தை அடுப்பிற்கு பக்கத்தில் வைத்தால் அது அந்த வாசனைய உறிஞ்சி நல்ல மனத்தை கொடுக்கும்.
இப்படிப்பட்ட வெங்காயத்தை நாம் பல வகைகளில் உபயோகப்படுத்தலாம். மேலும் தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுவதனால் நமது உடலில் சளி போன்ற தொந்தரவுகள் வராமலும் பார்த்து கொள்ளலாம்.