Connect with us

india

`பாரதத் தாய் இந்திரா காந்தி’ – கேரள பாஜக எம்.பி சுரேஷ் கோபி பேச்சு!

Published

on

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாரத் தாய் போன்றவர் என்று கேரளாவில் முதல் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பாஜக எம்பி என்கிற பெருமையை சுரேஷ் கோபி பெற்றார். இந்தநிலையில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.கருணாகரண் நினைவிடத்தில் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, `முன்னாள் முதல்வர்களாக ஈ.கே.நாயனாரும் கருணாகரணும் எனக்கு குருக்கள் போன்றவர்கள். எனது மரியாதையை கருணாகரனுக்கு செலுத்தவே இங்கு வந்தேன். இதற்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் கற்பிக்க வேண்டாம். ஈ.கே.நாயனார் மற்றும் அவரது மனைவி சாரதா டீச்சர் ஆகியோர்களைப் போலவே கருணாகரன் மற்றும் அவரது மனைவி கல்யாணிக் குட்டி அம்மா ஆகியோரிடமும் நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். கருணாகரண் கேரள காங்கிரஸ் தந்தை. அதேபோல், இந்திராகாந்தி பாரத் தாய் போன்றவர்’’ என்று பேசினார். சுரேஷ் கோபி வென்ற திருச்சூர் தொகுதியில் கருணாகரணின் மகன் கே.முரளிதரன் தேர்தல் முடிவில் மூன்றாவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

google news