india
300 அடி உயர மலை பகுதியில் கார் ஓட்ட முயற்சித்த இளம்பெண்… ஆக்சிலேட்டரை அழுத்தியதால் நடந்த கொடூரம்…
பெண்கள் பைக் ஓட்டுவதையே பயங்கர சாகசமாக்கி விடும் நிலையில் இருக்கிறது தற்போதைய சமூகம். இந்த நிலையில் ஒரு பெண் கார் ஓட்ட பழகுகிறேன் என உயிரையே விட்ட சம்பவம் தற்போது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஸ்வேதா தீபக். 23 வயதாகும் ஸ்வேதா தன் ஆண் நண்பருடன் தத்தாத்ரேயா கோயிலுக்கு சென்று இருக்கிறார். 300 அடி மலையில் இருக்கும் அந்த கோயிலை விட்டு கிளம்பும்போது ஸ்வேதா காரை எடுத்ததாக கூறப்படுகிறது.
காரை ஸ்வேதா ரிவர்ஸ் கியரை போட்டு மெதுவாக பின் எடுத்து இருக்கிறார். அவர் வீடியோ எடுக்க ஆண் நண்பரும் வெளியில் இருந்து அவர் கார் ஓட்டுவதை வீடியோவாக்கி கொண்டு இருக்கிறார். மலை உச்சிக்கும் காருக்கும் 50 அடி தூரம் இருந்ததால் நண்பர் கிளட்ச்சை அழுத்தும் படி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ஆனால் ஸ்வேதா தவறுதலாக ஆக்சிலேட்டரை கொடுக்க கார் பின்நோக்கி சென்று மலை உச்சியில் இருந்து உருண்டு விழுந்துவிட்டது. ஆண் நண்பர் காரை நிறுத்த முயற்சி செய்தும் அவரால் முடியாமல் போனது. கார் மொத்தமாக உருகுலைந்த நிலையில் பள்ளத்தில் இருந்து தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டு இருக்கிறது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஸ்வேதாவின் உடலும் மீட்கப்பட்டு இருக்கிறது. அவர் கார் ஓட்டி அது பள்ளத்தில் விழுந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மலையுச்சியில் இந்த சாகசம் தேவையா எனவும் பலரும் கண்டன குரல் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது வெர்ஷன் 2.0 – டி20 உலக சாதனையை சமன் செய்த நிகோலஸ் பூரான்!