Connect with us

latest news

என் பொண்டாட்டியவா வெளிநாட்டு வேலைக்கு அனுப்புறீங்க… மாமியார் குடும்பம் மீது ரிவெஞ்ச் எடுத்த மருமகன்

Published

on

கேரளாவில் தனது விருப்பத்தை மீறி மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய மாமியாரை ரிவெஞ்ச் எடுக்கும் விதத்தில் அவரின் வீடுகளைத் தீவைத்துக் கொளுத்திய மருமகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இடுக்கி அருகே உள்ள பைனாவு பகுதியைச் சேர்ந்தவர் அன்னாகுட்டி. கணவரை இழந்த இவருக்கு பிரின்ஸி என்கிற மகளும் ஜின்ஸ் என்கிற மகனும் உள்ளனர். மகள் பிரின்ஸி, தனது முதல் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் இரண்டாவதாக சந்தோஷ் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இத்தாலியில் நர்ஸாகப் பணியாற்றும் பிரின்ஸி, சில நாட்களுக்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். ஆனால், அவர் வேலைக்காக வெளிநாடு செல்வதில் சந்தோஷூக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இந்தநிலையில், இத்தாலி சென்ற பிரின்ஸி, சந்தோஷிடமிருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ், கடந்த ஜூன் 5-ம் தேதி பிரின்ஸியின் வீட்டுக்குச் சென்று அவரின் தாயிடம் சண்டையிட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் மீதும் அவரின் பேத்தி மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த இருவரும் இடுக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து செல்போனை வீசியெறிந்துவிட்டு தனது சகோதரர் வீட்டில் தலைமறைவாகியிருக்கிறார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் கடண்ஆ 16- ம் தேதி இடுக்கி திரும்பிய சந்தோஷ் மீண்டும் பிரின்ஸியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு யாரும் இல்லாத நிலையில் பிரின்ஸியின் தாயாருக்குச் சொந்தமாக இரு வீடுகளுக்கும் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து கேரள – தமிழ்நாடு எல்லையில் உள்ள போடிமெட்டு பகுதியில் பதுங்கியிருந்த சந்தோஷை இடுக்கி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *