Connect with us

india

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு ஓட்டுநர்கள் காரணமா?… புகாரளித்த பெண் கொடுத்த திடீர் அதிர்ச்சி…

Published

on

மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை மையமாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து இருந்தது. தற்போது இந்த விஷயத்தில் திடீர் திருப்பம் ஒன்று நடந்து இருக்கிறது.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஜல்பைகுரி பகுதியில் நின்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கடைசி பெட்டியில் இருந்த 10க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 60க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கிய சைதாலி மஜூம்தார் நடந்த இந்த விபத்துக்கு காரணம் இரண்டு ரயிலின் ஓட்டுநர்கள் தான் என புகார் அளித்ததாக ரயில்வே காவல்துறை தெரிவித்தது. அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் போடப்பட்டது.

இந்நிலையில், குறிப்பிடப்படும் அந்த பெண் சைதாலி தான் புகாரளிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நான் சிகிச்சையில் இருக்கும் போது காவலர்கள் வந்து என்னை குறித்து விசாரித்துவிட்டு வெற்றி பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றனர். பின்னர் அதை தான் புகார் மனுவாக மாற்றி இருக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நான் எப்படி புகார் கொடுத்து இருக்க முடியும். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பின்னரே நான் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்ட தகவல் தனக்கு தெரிந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், சரக்கு ரயிலின் ஓட்டுநர் இறந்துவிட்ட நிலையில் உதவி ஓட்டுநர் மட்டுமே படுகாயத்துடன் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேற்கு வங்க ரயில் விபத்து!. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!.. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *