Connect with us

tech news

ரூ. 40,000 பட்ஜெட்டில் Flagship போன் அறிமுகம் செய்த ரியல்மி

Published

on

ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 120Hz LTPO AMOLED ஸ்கிரீன், ப்ரோ-XDR டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5, மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது.

IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் USB C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ வசதிகளை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிஓறதது. இத்துடன் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விலை விவரங்கள்:

  • ரியல்மி GT 6 8GB ரேம், 256GB மெமரி மாடல் ரூ. 40,999
  • ரியல்மி GT 6 12GB ரேம், 256GB மெமரி மாடல் ரூ. 42,999
  • ரியல்மி GT 6 16GB ரேம், 512GB மெமரி மாடல் ரூ. 44,999

புதிய ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், ரியல்மி இந்தியா வலைதளங்களில் ஜூன் 25 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

அறிமுக சலுகைகள்:

  • இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ICICI, HDFC மற்றும் SBI வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4000 தள்ளுபடி
  • எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி
  • அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி
  • 6 மாதங்களுக்கு ஸ்கிரீன் ப்ரோடெக்ஷன்
google news