latest news
நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அரசுக்கு ஆதரவாகவே அதிமுக இருந்தது.
எனவே, இதை கையிலெடுத்த திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்குவோம். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி தருவோம் என வாக்குறுதி கொடுத்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவோம் எனவும் சொன்னது. ஆனால், இப்போதும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய் அவர் ‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடங்கிய குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாக மாறிவிட்டது. நீட் நுழைவு தேர்வு வசதி படைத்தவர்களுக்கு வசதியாக உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறினார். இந்த தனித்தீர்மானத்தை அனைத்து கட்சியினரும் வரவேற்று பேசியதால் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.