india
88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்
டெல்லியில் கடந்த சில மணிநேரங்களாகவே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை கனமழையால் டெல்லியின் டெர்மினல் 1 மேற்கூரை உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில் 10க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வானிலை மையம் கூறும்போது டெல்லிக்கு இன்னும் ஏழு நாட்கள் மழை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் நஷ்ட ஈடும், காயங்களுடன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 3 லட்சம் வரை நஷ்ட ஈடும் கொடுக்கப்படுவதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டெர்மினல் 1ல் இருந்து விமானங்கள் இயங்காது.
நிலைமை சீராகும் வரை டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 3ல் இயக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி வசந்த் விஹார் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இருப்பது கட்டுமான பணியாளர்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் நீர் நிறைந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் இருக்கிறது.
பல இடங்களில் மெட்ரோ இயக்கப்படவில்லை. கடும் வெயிலில் இருந்து மிக கனமழையை டெல்லி சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து பிஜேபி தரப்பு, டெல்லி அரசை சாக்கடைகளை சுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் செய்த தவறால் மக்கள் அவதிப்படுவதாக தெரிவித்து இருக்கின்றனர்.