Connect with us

india

ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

Published

on

ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை சந்திக்கச் சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் மோசடியால் ரூ.1.21 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யுபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்போடு டெல்லியில் படித்து வருபவர் அந்த இளைஞர். டேட்டிங்கில் ஆர்வம் கொண்ட அவர் டிண்டர் செயலியில் வர்ஷா என்கிற இளம்பெண்ணைப் பார்த்திருக்கிறார். சில மாதங்களாக இருவரும் பேசிக்கொண்ட நிலையில், கடந்த 23-ம் தேதி அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் சந்தித்திருக்கிறார்கள்.

கஃபேவில் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு அந்தப் பெண் பழரசம் ஆர்டர் செய்து குடித்திருக்கிறார். சிறிதுநேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகச் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். அந்தப் பெண் சென்ற சிறிது நேரத்திலேயே கஃபே சார்பில் அவருக்கு ரூ.1,21,917.70 பில் கொடுத்திருக்கிறார்கள். என்னடா இது நாம் சாப்பிட்ட கேக்குக்கும் பழரசத்துக்கும் அதிகபட்சம் சில ஆயிரங்கள்தானே ஆகும் என்று அவர் அதிர்ச்சியான நிலையில், மிரட்டி அவரிடம் இருந்து பணத்தைப் பறித்திருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறிய அவர் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் அந்த கஃபே உரிமையாளரான அக்‌ஷய் பாவாவை கைது செய்து விசாரித்ததில் இந்த கும்பலின் மோசடி அம்பலமானது. டெல்லி சுற்றுவட்டாரத்தில் டேட்டிங்கில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து அஃப்சன் பிரவீன் என்பவர் பெண்களின் பெயரில் வலைவீசி பேசுவதும், பின்னர் நேரில் சந்திக்கவும் தூண்டுவாராம்.

நேரில் சந்திக்க வரும் நபரை சந்திக்க வேறொரு பெண்ணை அனுப்புவார்களாம். இதேபோல், அவசரம் என்று சொல்லி பாதியிலேயே அந்தப் பெண் நழுவிவிட குறிப்பிட்ட நபரிடம் மிரட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பறிக்கப்படும் மொத்தப் பணத்தில் அந்தப் பெண்ணுக்கு 15%, அஃப்சன் உள்ளிட்ட கஃபேவில் பணியாற்றும் நபர்களுக்கு 45% மற்றும் கஃபே உரிமையாளருக்கு 40% என பகிர்ந்துகொண்டதும் தெரியவந்திருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *