india
கடவுளை கேட்டுத்தான் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தாரா?!. விளாசிய ராகுல் காந்தி…
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல், கடந்த 2 தேர்தல்களிலும் மிகவும் குறைவான இடங்களை பிடித்த காங்கிரஸ் இப்போது அதிகமான இடங்களை பிடித்து எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது.
தனிக்கட்சியாக பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிற்து. இந்நிலையில், பாராளுமன்ற் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசியது அனல் பறந்தது. அவர் பேசியதாவ்வது:
என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளியது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும் அமித்ஷாவும் ஏன் செல்லவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
அக்னி வீரர் திட்டத்தில் சேருபவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் இழப்பீடு தரப்படுவதில்லை என சொன்ன ராகுல், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என கேட்டார் ராகுல்.
மேலும், மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட தெரிவிப்பதிலை. பாஜக தலைவர்களை கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். இவ்வளவு பேசும் மோடி காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். சினிமா மூலம்தான் காந்தி மக்களிடம் அறியப்பட்டார் என அவர் சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.