Connect with us

india

கழிவறையிலிருந்து வந்த அழுகுரல்.. சத்தம் கேட்டு சென்ற ஆசிரியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. மாணவி செய்த சம்பவம்…!!

Published

on

கர்நாடக மாநிலத்தில் ஒரு மாணவி கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் ஆர்எல் ஜாலப்பா பியுசி என்ற கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் 15 வயதான மாணவி ஒருவர் பியுசி முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த சோறுடன் காணப்பட்டிருந்தார். இதை அடுத்து நேற்று திடீரென்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கழிவறையில் இருந்து குழந்தை அழுகும் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து போய் கழிவறைக்கு சென்ற ஆசிரியர்கள் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கோலார் புறநகர் போலீசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவி மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்த காரணத்தினால் தான் கர்ப்பமானதாக தெரிவித்தார். மேலும் பெற்றோருக்கு தெரியாமல் அதை மறைத்து வந்த இவர் கல்லூரி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றார்.

அவருக்கு வயிறு பெரிதாக தெரியாததால் பெற்றோரும் அதை கவனிக்கவில்லை. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கல்லூரி மற்றும் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *