latest news
வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி.. அப்போ இனி நம்ம மெசெஜை யாருமே பார்க்க முடியாதா!..
கடிதம், தபால் என அனுப்பிய காலம்போய் தற்போது அனைவருமே நமது மொபைலின் மூலமே மற்றவர்களுக்கு தகவல்களை அனுப்புகிறோம். தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப பல செயலிகள் உள்ள நிலையில் அதில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செயலிதான் வாட்ஸ் ஆப். இந்த செயலியின் மூலம் நாம் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். மேலும் இதன் மூலம் நாம் நமது மனநிலைமையை மற்றவர்களுக்கு ஸ்டேட்டஸ் எனும் வடிவில் தெரிவிக்கலாம். மேலும் வீடியோ கால், வாய்ஸ் கால் என இன்னும் பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் தற்போது தனது செயலியில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் நாம் பிறருக்கு அனுப்பும் தகவல்களை பிறர் பார்க்க முடியாத வகையில் பல பிரைவசி ஃபீச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது அதற்கு முன் கடவு சொல், ஃபிங்கர் ப்ரிண்ட், ஃபேஸ் ரெகாக்னிஷன் என இவைகளில் ஏதோ ஒன்றினை செலுத்தினால் நமது சாட் பக்கத்தினை நாம் உபயோகப்படுத்த முடீயும்.
மேலும் இந்த வசதியின் மூலம் நமது நோட்டிஃபிகேஷன் பாரில் நமக்கு வரும் செய்தியையோ அல்லது அனுப்புபவரின் பெயரையோ பார்க்க இயலாது. இந்த வசதியை தற்போது அனைத்து ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் உபயோக்கிக்கலாம்.
இதற்கு நாம் ஆப் ஸ்டோர் அல்லது கூகுல் பிளே ஸ்டோரில் சென்று வாட்ஸ் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கம் செய்து இந்த வசதியினை உபயோகித்து கொள்ளலாம்.