Connect with us

india

வேலை நேரத்துல ரீல்ஸ்… சிக்கலில் 8 கேரள அரசு ஊழியர்கள் 8 பேர்!

Published

on

கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடிய ரீல்ஸ் ஒன்று சமீபத்தில் வைரலானது. அலுவலக வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் வைரலானது, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவல்லா நகராட்சியின் செயலாளர், அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டது ஏன் என்று விளக்கம் கேட்டு ஊழியர்கள் 8 பேருஜ்க்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நோட்டீஸுக்கு அவர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

`அலுவலக நேரத்தில் ரீல்ஸ் போட்டதாகத் தெரியவந்த தகவலை அடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் என்னுடைய கடமையை மட்டுமே செய்திருக்கிறேன்’ என்று நகராட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், அலுவலக வேலை நேரத்தில் ரீல்ஸ் போடவில்லை என்றும் பணி இடைவெளியின்போதுதான் ரீல்ஸ் செய்ததாகவும் அந்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பணி எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

google news