Connect with us

india

பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாள் விஐபி தரிசனம் ரத்து.. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்..!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

கூட்டமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருக்கிறார்கள். அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.

பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி மற்றும் 16ஆம் தேதி களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் ஆனி வாரம் ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒன்பதாம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி நேரம் இடைவெளியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

google news