Connect with us

india

கைதி தர்ஷனின் எண்ணை பச்சை குத்தும் ரசிகர்கள்… குழந்தைக்கு கூட அந்த மாதிரி உடையா?

Published

on

கன்னட திரையுலகில் கொடி கட்டி பறந்து வந்தவர் நடிகர் தர்ஷன். அவர் தன்னுடைய காதலி பவித்ரா கவுடாவிற்கு ஆபாச செய்தி அனுப்பியதாக கூறி ரேணுகா சுவாமி என்பவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார்.

முதலில் இந்த வழக்கில் தர்ஷனுக்கு பதில் ஐவர் சரணடைந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை தொடர்ந்தது. அதன் முடிவில் கன்னடா நடிகர் தர்ஷனை அவரின் ஜிம்மில் வைத்து கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரின் காதலி பவித்ராகவுடா உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருந்தகத்தில் வேலை செய்து வந்த ரேணுகா சுவாமியை கொடூரமாக தாக்கியதாக புகைப்படங்கள் வெளியானது. அவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் கடித்த காயங்கள், ரத்த கட்டுகள் என பார்ப்பதற்கே கொடூரமாக காணப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட தர்ஷன் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

அவருக்கு சிறையில் 6106 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துள்ள நிலையில், தர்ஷனின் ரசிகர்கள் அதை பச்சை குத்திக்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது ஒரு ஒருபுறமிருக்க தம்பதி ஒருவர் தங்களுடைய குழந்தைக்கு தர்ஷனின் கைதி கெட்டப்பை போட்டு உள்ளனர்.

கை குழந்தைக்கு நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தர்ஷனின் எண்ணை சட்டையில் குத்திவிட்டு தி பாஸ் என்ற தர்ஷனின் அடைமொழி குறிப்பிட்ட பேப்பரும் அருகில் இருக்கிறது. இந்த போட்டோ வைரலாகி வரும்  நிலையில், குழந்தைக்கு கைதி கெட்டப் போடுவது தவறான முன்னுதாரணம். இந்த போட்டோவை பதிவிட்டவர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறை உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *