Connect with us

latest news

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் முக ஸ்டாலின்… மலர் தூவி மரியாதை, குடும்பத்தினருக்கு ஆறுதல்…!

Published

on

படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு ,பின்னர் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .மேலும் கொலையாளிகள் அவரை வெட்டிவிட்டு தப்பு செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து செம்பியம் போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த வழக்கில் கொலையானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் அவர்களை விரைவில் கண்டுபிடித்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர் ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *