tech news
10-வது ஆனிவர்சரிக்கு 5 புது சாதனங்களை களமிறக்கிய சியோமி..!
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், அந்நிறுவனம் ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்போன், மேம்பட்ட ரோபோட் வேக்யூம் கிளீனர், 2 பவர் பேங்க் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புதிய ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 12,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 5030mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W சார்ஜிங் உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE பிராசஸர் உள்ளது.
ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பட்ஸ் 5C மாடலில் 40db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 12.4mm டைனமிக் டைட்டானியம் டிரைவர்கள், குவாட் மைக், AI ENC, 36 மணி நேரத்திற்கு பிளேடைம் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 1,999 ஆகும். இத்துடன் இரண்டு புதிய பவர்பேங்க் மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது.
இவை இரண்டிலும் 10000mAh பேட்டரி உள்ளன. இத்துடன் பில்ட் இன் டைப் சி போர்ட் உள்ளது. இதில் மல்டி போர்ட் அக்சஸ் மற்றும் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசததி உள்ளது. இவற்ரின் விலை ரூ. 1,699 மற்றும் ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கடைசியாக சியோமி அறிமுகம் செய்த புதிய ரோபோட் வேக்யூம் கிளீனர் X10 மாடலில் 2.5 லிட்டர் அதிக திறன் கொண்ட டிஸ்போசபில் பேக் உள்ளது. இதில் 4000Pa இழுக்கும் திறன் உள்ளது. இதில் 5200mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தை தொடர்ச்சியாக 240 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ. 29,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.