டிவி பார்த்தது ஒரு குத்தமாயா…? மகளுக்கு நூதன முறையில் தண்டனை கொடுத்த தந்தை… அடப்பாவமே…!

0
50

டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தந்தையின் கேள்விக்கு பதில் அளிக்காத காரணத்தினால் தந்தை நூதன முறையில் அவருக்கு தண்டனை கொடுத்திருக்கின்றார்.

சீனாவின் குவாஞ்சி ஜுவான் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு உணவு தயாரித்த பின் ஜியாஜியாவின் தந்தை அவரை சாப்பிடுவதற்கு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கி இருந்த அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த தந்தை தொலைக்காட்சியை ஆப் செய்தார். ஜியாஜியா இதனால் அழ தொடங்கி இருக்கின்றார்.

இதை பார்த்த அந்த தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்ப வேண்டும். அப்படி நிரப்பிய பிறகு நீ டிவி பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றார். ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கண்ணீரை வைத்து அழுது கொண்டே கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்திருக்கின்றார்.

10 வினாடிக்கு மேல் போராடி பின்னர் அவர் சோர்வடைந்தார். இந்த சம்பவத்தை அவரின் அம்மா வீடியோவாக எடுத்து இணையத்தின் பகிர்ந்து இருக்கின்றார். சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியின் தந்தை அவரை அழைத்து சமாதானப்படுத்தி சிரிக்க வைத்தார்.  இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here