சவுண்ட் பிச்சிக்கும்.. ரூ. 1,999-க்கு போட் அறிமுகப்படுத்திய ப்ளூடூத் ஸ்பீக்கர்

0
84

இந்திய சந்தையில் அசத்தலான கேட்ஜெட்களை அறிமுகப்படுத்துவதில் பெயர்பெற்ற நிறுவனம் போட். ஹெட்செட், இயர்பட்ஸ், ப்ளூடூத் ஸ்பீக்கர் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான சாதனங்களை போட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

அந்த வரிசையில் போட் நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஸ்டோன் 352 ப்ரோ என்ற பெயரில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் ஸ்டோன் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் போட் நிறுவனம் பாஸ்ஹெட்ஸ் 122 ANC இயர்போன்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய போட் ஸ்டோன் 352 ப்ரோ மாடலில் போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதில் பில்ட்-இன் மைக்ரோபோன் உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்த நிலையில், அழைப்புகளையும் பேச முடியும். இத்துடன் TWS கனெக்டிவிட்டி, ஏராளமான கனெக்டிவிட்டி போர்ட்கள், IPX4 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய போட் ஸ்டோன் 352 ப்ரோ மாடல் ரேசிங் பிளாக், க்ரூவி கிரே மற்றும் வைபிங் புளூ என மூன்றுவித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here