சாய்னா நேவால் உடன் பேட்மிட்டன் விளையாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு… வைரலாகும் வீடியோ..!

இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் உடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேட்மிட்டன் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது வென்ற வீராங்கனைகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்வா நேவால் வந்திருந்தார். அவருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேட்மிட்டன் விளையாடியிருக்கின்றார். இதைப் பார்த்த அரங்கில் இருந்த பலரும் இதை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை “உலக அரங்கில் பெண்கள் வீராங்கனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பேட்மிட்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்னா நேவால் உடன் குடியரசு தலைவர் பேட்மிட்டன் விளையாடியது அனைவருடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த விளையாட்டின் மீது குடியரசுத் தலைவருக்கு இயற்கையாகவே பற்று உண்டு என்பதை காட்டுவதாக பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment