தனி வீடு, கார், ஆபிஸ்… வேலைக்கு சேரும் முன்பே பயிற்சி கலெக்டரின் அட்ராசிட்டி!

0
42
Puja Khedkar
Puja Khedkar

புனேவில் உதவி கலெக்டராகப் பதவியேற்கும் முன்பே பெண் பயிற்சி கலெக்டர் ஒருவர் தனி வீடு, அலுவலகம், கார் என டிமாண்ட் வைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டராகப் பயிற்சி பெற பூஜா கெத்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் பணியில் சேரும் முன்னர், மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப்பில் எனக்கு இதெல்லாம் நிச்சயம் வேணும்’ என மெசேஜில் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

அதன்படி கலெக்டருக்கு அவர் அனுப்பியிருக்கும் வாட்ஸ் அப் மெசேஜில், தனக்கென தனி அலுவலகம், தங்குவதற்கு வசதியான வீடு மற்றும் அலுவலகம் சென்று திரும்ப டிரைவருடன் தனி கார் வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்திருக்கிறார்.

உதவி கலெக்டராக பயிற்சியில் இணையும் முன்பே இத்தனை கோரிக்கைகளை வைக்கிறாரே என அதிர்ச்சியடைந்த கலெக்டர் இதுபற்றி தலைமைச் செயலாளரிடம் பேசுவதாக அவருக்கு பதில் அனுப்பியிருக்கிறார். அத்தோடு, இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவதில் நிர்வாகரீதியிலான சிக்கல்கள் எழலாம் என தலைமைச் செயலாளருக்கு இதுபற்றிய புகாரை அறிக்கையாகவும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையடுத்து, புகாரின் மீது விசாரணை மேற்கொண்டதில் கலெக்டர் சொன்ன தகவல்கள் உண்மைதான் என்று தெரியவந்திருக்கிறது. 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா, ஐஏஎஸ் தேர்வின்போதே போலியான மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது. அதேபோல், போலியான ஓபிசி சான்றிதழ் சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பின் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல், தனது சொந்த ஆடம்பர காரில் ஒளிரும் நீல விளக்குகளோடு மகாராஷ்டிரா அரசு என்கிற ஸ்டிக்கரையும் ஒட்டி பயன்படுத்தி வந்துள்ளார். இந்தப் புகார்களைத் தொடர்ந்து அவர் வாஸிம் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பணியாற்ற மாறுதல் அளித்து உத்தவிடப்பட்டிருக்கிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here