குழந்தைகளை படிக்க வைக்க கிட்னியை விற்ற தந்தை… கடைசியில் நடந்தது தான் பெரிய கொடுமை…

0
39

தன்னுடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க நினைத்த தந்தை ஒருவர் தன்னுடைய கிட்னியை விற்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவரின் அந்த முடிவு அவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்த அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த 31 வயதான ஆட்டோ ஓட்டுநர் மதுபாபு கர்லபதி. இவரின் குறைந்த வருமானம் அவரின் குடும்ப செலவிற்கே பெரிய பிரச்சினையாக இருந்திருக்கிறது. இருந்தும் கடன் வாங்கியும் தன்னுடைய குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், பேஸ்புக்கில் கிட்னி விற்பதற்கு 30 லட்சம் என்ற விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். இதனை அடுத்து தன்னுடைய கிட்னியை விற்க இவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜயவாடாவை சேர்ந்த பாட்ஷா என்ற ஏஜென்டை சந்தித்து தன்னுடைய கிட்னியை விற்க சம்மதம் கொடுத்திருக்கிறார்.

இருந்தும் மதுபாபு பாட்ஷாவின் மீது தொடர்ந்து சந்தேகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்வதற்காக இன்னொரு பெண்ணை வைத்து தானும் கிட்னி விற்றதாகவும் எனக்கு சரியாக பணம் வந்து விட்டதாகவும் பேச வைத்து நம்ப வைத்து இருக்கிறார்.

இதை எடுத்து சில நாட்களிலேயே கிட்னி தேவைப்படுவதாக கூறி மதுபாபுவை விஜயவாடாவில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து  ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. கிட்னி பெற இருப்பவர் குடும்பத்தையும் மதுபாபுவிடம் பேச வைத்துள்ளனர். ஆபிரேஷன் முடிந்த பின்னர் ஒரே தவணையில் கொடுத்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.

மதுபாபுவும் நம்பிக்கையாக ஆபிரேஷன் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு 50 ஆயிரத்தினை கொடுத்து 30 லட்சத்தினை ஏமாற்றி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியான மதுபாபு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பேசியவர், எனக்கு கடன் இருப்பது தெரிந்து என்னை ஏமாற்றி இருக்கின்றனர். கிட்னி விற்ற பணத்தை வைத்து  என்னுடைய குழந்தைகளை படிக்க வைக்கலாம் என நினைத்திருந்தேன். இதனால்தான் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சொந்தங்களுக்குள்ளே மட்டுமே கிட்னி தானம் செய்ய முடியும் என்பதால் மதுபாபு மற்றும் கிட்னி பெற்றவர் இடையே போலியான ஆவணம் மூலம் உறவு உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை எடுத்து விசாரணையை காவல்துறை முடக்கி விட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here